Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில்…. “ஒவ்வொரு மணி நேரமும் 1 விவசாயி தற்கொலை” தினசரி 30 பேர்…. பகீர் கிளப்பிய காங்கிரஸ்….!!!!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பாஜக கட்சியின் கொள்கைகள் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி புனேவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவர் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு பாஜக அரசின் கொள்கைகள் மட்டும்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி தன் மீது மட்டுமே அக்கறை கொண்டிருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் ‌10,881 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்ட 1,64,033 பேர்களில் 6.6 சதவீதம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு மணி நேரத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 53,881-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதன்படி பார்த்தால் தினசரி 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார். மேலும் தேசிய குற்ற பதிவு பணியக தரவை மேற்கோள் காட்டி சுப்ரியா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |