Categories
அரசியல்

பாஜக ஆட்சி 100%சூப்பர்…! சும்மா விடமாட்டாரு யோகி…. கெத்தாக பேசிய அண்ணாமலை …!!

உ.பி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேசத்தில் நடந்த கொலையை கொலையாக பார்க்கின்றேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்க்கின்றேன். நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்முடைய யோகி ஆதித்யநாத் முதல்வரை பொருத்தவரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்.

உத்திரபிரதேசத்தில் லான் ஆர்டர் எடுத்துகிட்டீர்கள் என்றால், அவருடைய ஆட்சியிலும் இதற்கு முன்னால் இருந்த அகிலேஷ் யாதவ் அவருடைய ஆட்சியிலும், அதற்கு முன்னால் இருந்த பகுஜன் சமாஜ்  மாயாவதி ஆட்சியிலும், அதற்கு முன்னால் காங்கிரஸ் ஆட்சியை எடுத்து பார்த்தால்….

மொத்தமாக பார்த்தீர்கள் என்றால், நூறு மடங்கு நம்முடைய ஆட்சி என்பது லான் ஆர்டரை பொறுத்தவரையில்  சிறப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் விவசாயிகள் மேலே போய் ஒருத்தர் இடிச்சிட்டாங்க என்றால் இதெல்லாம் கண்டிப்பா ஏற்றுகொள்ள மாட்டேன். நாங்களும் விவசாயி தான், அதே சமயத்தில் அரசு நான் நடவடிக்கை எடுக்கின்றேன், யாரையும் விடமாட்டேன் என்று சொல்லும் பொழுது அதற்கான நேரத்தையும் கொடுக்க வேண்டும்.

சம்பந்தமே இல்லாமல் பஞ்சாபினுடைய காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து சொல்கிறார், நான் வந்து லக்கிபூருக்கு செல்ல போகிறேன், அப்ப மீடியா கேள்வி கேக்குறாங்க… பக்கத்துல பேசுறார், இந்த  சி.எம்.ஐ போட்டிருக்காங்க, எப்படி காங்கிரஸ் காப்பாற்றுவது ? என்ன சி.எம் ஆக போட்டால் காங்கிரசை காப்பாற்றுவேன், லக்கிம்பூர் சலோ அப்படி என்று சொல்கிறார்.

இந்த மாதிரி டிராமாக்கள், இது தான் டிராமா. அதேபோல பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தி அவர்களும் அப்பப்போ உபிக்கு டூர் வராங்க. தேர்தல் வந்தாச்சுன்னா டூர். ராகுல் காந்தியை பார்த்தீர்கள் என்றால்.. நெற்றியில்  பட்டையை போட்டுவிட்டு சிவன் கோவிலுக்கு டூர் போறாரு அல்லவா அது போல டூர் போற  அரசியல்வாதி. ஆனால் யோகி ஆதித்தயநாத் அப்படி கிடையாது,  உ.பிலேயே இருந்து மக்களுக்காக தந்தை இறந்த பிறகும் கூட இறுதி சடங்கிற்கு போகாமல் வேலை செய்கிறார்.

அதனால் கேள்வி கேளுங்கள், லாஜிக்கோடா பண்ணுங்க, நடவடிக்கை எடுக்கிறோம் சொல்லியாச்சு. ஒன்னொன்னா பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள். அது யாராக இருந்தாலும் நம்ம முதலமைச்சர் சொல்லிருக்காரு,  யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படு என்று. இது எல்லாத்துக்கும் மேல சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக பதில் சொல்ல சொல்லி இருக்கிறார்கள். மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டிலும் பதில் சொல்லி இருக்காங்க. அப்படி இருக்கும்போது நமக்கு என்ன பயம் ? குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |