செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். இது புதிதல்ல. 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருக்கும்போது, சென்னையில் வடிகாலுக்காக பெர்மனன்ட் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் 633 கோடி ரூபாய் ஒதுக்கினார். பின்னர் 4 வருடம் கழித்து 2015ஆம் ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இதையடுத்து அதிமுக ஆட்சியிலும் வெள்ளம் வந்துள்ளது.
நான் 7 ஆம் தேதியன்று சென்னையில் இருந்தேன். விடி காலையில் 1 மணி நேர மழை தான் மாம்பழம் நிறுத்தத்திலிருந்து வடபழனி வீட்டிற்கு செல்வதற்கு 1.15 மணி நேரம் ஆகியது. சிறிய கார்கள் நின்றுவிட்டது ஏன்? நான் 2 நாட்களுக்கு முன்னர் பெங்களூரு சென்றிருந்தேன். மழை பெய்து 1/2 மணி நேரத்திற்குப் பின்னர் மழைபெய்த சுவடு இல்லை.
சென்னையில் உள்ள ஏரிகளில் எல்லாம் வீடுகளாக்கி, 1961 திராவிடம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம், பொதுவாழ்க்கைக்கும் ஒழுக்கம் வேண்டாம் என்ற எண்ணம் தமிழ் மக்கள் மனதில் வந்து விட்டது. ஏரிகள், குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு கல்வி நிலையங்களாக இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் ஏரியில் இருக்கிறது என தெரிவித்தார்.