அதிமுகவின் ரயில் பாஜக இல்லை என்றால் ஓடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்
சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். ஆனால் பாஜக தலைவரான எல். ராதாரவி முருகனும் முதல்வர் பழனிச்சாமியும் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறுகின்றனர்.
இருப்பினும் அதிமுக அமைச்சர்களும் பாஜகவை சேர்ந்தவர்களும் தொடர்ந்து எலியும் பூனையுமாக தங்கள் கருத்துக்களால் மோதி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராதாரவி நாகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது “பாஜக நடத்த திட்டமிட்ட வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காத அதிமுக அரசின் ரயில் பாஜக அரசு இல்லை என்றால் நிச்சயமாக ஓடாது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவது உறுதி என கூறினார். அதோடு கூட்டணி தொடர்பான பிரச்சினையும் தேர்தல் குறித்த கவலையும் பாஜகவிற்கு மட்டும்தான் இல்லை” எனக் கூறியுள்ளார்.