Categories
மாநில செய்திகள்

“பாஜக இல்லை திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுவார்கள்”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை…!!!!!

முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை.  ஆனால் மிசா சட்டத்தில் கைதானது போல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்துள்ளார் மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.

இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, தமிழ்நாடு அரசு பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பாஜகவினர் சிறை செல்ல  அஞ்சுபவர் இல்லை எனவும் திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுபவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் சிறை செல்லவில்லை சட்டத்தில் சிறை சென்றது போல் சொல்லி வருகின்றார் என விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் இதேபோல் முதல்வர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என சர்ச்சை எழுப்பப்பட்ட நிலையில் அந்த சர்ச்சையை மீண்டும் அண்ணாமலை எழுப்பி உள்ளார்.

Categories

Tech |