மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தற்போது கூர்கா ஜம் முக்தி மோர்சா கட்சி விலகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தற்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் ஒன்று கோரி போராடி வந்த கூர்கா ஜன் முக்தி மோர்ச்சா என்ற கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து நேற்று விலகியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைவர் கூறுகையில், ” கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறோம்.
ஆனால் டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு நிரந்தர தீர்வு மற்றும் பதினோரு கூறுகளை சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது போன்ற வாக்குறுதிகளை பாரதிய ஜனதா தற்போது வரை நிறைவேற்றவில்லை. எங்களை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். அதனால் அந்த அணியில் இருந்து நாங்கள் விலகுகிறோம். அடுத்த வருடம் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை நாங்கள் ஆதரிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.