Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக என்ன நினைச்சுட்டு இருக்கு ? இதுலாம் சரி இல்லை… முடிவு கட்ட போகும் அதிமுக …!!

வரும் ஜனவரி 9ஆம் தேதி ஆர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப் பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தேர்தல் நெருங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் என்று இன்னும் சொல்லவில்லை. பாஜகவின் தேசியத் தலைமை தெரிவிக்கும் என்று தெரிவித்து வருகின்றனர் இது குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |