Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக என்ன நெருக்கடி கொடுத்தாலும்…. எங்களுக்கு கவலையில்லை… சரியான பாதையில் செல்வோம் …!!

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சடங்குத்தனமாக சமூக நிதி திட்டங்களை, கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றாது. உயிரோட்டமாக அதை நடைமுறைபடுத்தும் என்ற நம்பிக்கையோடு, வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் உடைய நினைவு நாளிலே சமபந்தி போஜனம் நடைபெறுவது என்பது ஒரு சடங்கு தனமான நிகழ்ச்சியாக இருக்கிறது.

இத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாளாவது ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி என அரசு நடத்துகிற விடுதிகளுக்கு சென்று அவர்களோடு ஒரு நாளாவது அல்லது ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும், ஒரு வேளை உணவாவது அந்த மாணவர்களோடு சேர்ந்து அருந்தவேண்டும்.

அந்த அடிப்படையிலே அந்த மாணவர் விடுதிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை மாண்புமிகு முதல்வரிடத்திலே முன்வைத்திருக்கின்றோம். மிக குறிப்பாக எண்ணிக்கை அளவில் gross endrolment ratio என்ற அடிப்படையிலே, தரவுகளின் அடிப்படையிலே இந்திய அளவில் நாம் இரு மடங்கு உயர்ந்த நிலையை அடைந்து இருந்தாலும், தரம் என்கின்ற அளவிலே அதை மீண்டும் வலிமை படுத்திட பள்ளி கல்வித்துறையின் உள்கட்டமைப்பை சீரமைப்போம் என்ற அறிவிப்பும்,

உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கின்ற பாடத்திட்டங்களை மீளாய்வு செய்து அதனை ஒழுங்கு செய்வோம் என்ற அறிவிப்பும் மிகவும் கவனத்திற்கு உரியன, ஈர்ப்புக்கு உரியன, விடுதலை சிறுத்தைகள் ஆளுநர் உரை என்கிற அடிப்படையில் முன்வைக்கப்பட்டிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொள்கை பிரகடனத்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசின் கொள்கை செயல்திட்டங்களை 100 விழுக்காடு மனதார வரவேற்கிறோம்.

அனைத்து கட்சி கூட்டம் என்பது நிச்சயமாக ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே தமிழகத்திற்கு அப்படிப்பட்ட முன்னோடி அனுபவங்கள் உண்டு. ஒன்றிய அரசு எத்தகைய நெருக்கடியை தந்தாலும், அவற்றை எதிர்கொண்டு ஒரு உரிய திசை வழியே தனக்கென அமைத்து கொள்கின்ற முந்தைய அனுபவங்களின் அடிப்படையிலே இந்த அனைத்து கட்சி நல்ல தீர்வை மாண்புமிகு முதல்வரின் தலைமையிலே எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தனர்.

Categories

Tech |