பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல் மந்திரி யோகி ஆதிநாத் அரவிந்த் கிரியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அரவிந்த் கிரியின் மறைவு துரதிஷ்டவசமானது. அரவிந்த் கிரியை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். கடவுள் ராமபிரான் தன்னுடைய காலடியில் அவருக்கு இடம் கொடுக்கட்டும். இது அளவிட முடியாத ஒரு இழப்பு. ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.