Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு கொரோனா…. அதை மற்ற கட்சிக்கும் பரப்பி வருகிறது…. கே.எஸ் அழகிரி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுகவும் திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீட்டித்து வந்தது . திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு நின்றது. ஆனால் திமுக கறார் காட்டி வந்ததால் அதிருப்தி நிலவியது.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு திமுக 25 தொகுதிகள் ஒதுக்கியதால் கே.எஸ் அழகிரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது. அதிமுக வென்றுவிட கூடாது. அதனால் திமுக வுடன் கூட்டணி வைத்துள்ளோம். பாஜாக ஒரு கொரோனா வைரஸ். அந்த தொற்று நோயை பாஜக மற்ற கட்சிகளுக்கும் பரப்பி வருகின்றது என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |