ஹரியானா மாநில முன்னாள் முதல்வரை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெண்களுக்கான மரியாதையை கொடுத்த கட்சி அல்ல. என்னை விட நம்ம சகோதரி குஷ்பு நல்லாவே சொல்லிருக்காங்க. ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, சேப்பாக்கம் தொகுதியே நான் போட்டியிடுவேன் என நம்பிக்கை இருப்பதாக நான் எப்போதும் சொல்லல. ஆரம்பத்துல இருந்து எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சேப்பாக்கம் தொகுதியில் செய்து வருகின்றேன்.
நான் வந்து தேர்தல்ல நிக்க போறேன், எனக்கு நிச்சயமாக ஒரு ஸிட் கொடுப்பாங்கனு நான் வரல. கட்சி மேல உள்ள நம்பிக்கையில் தான் பாஜகவில் வந்துருக்கேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த தேர்தல்ல ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்துட்டு இருக்கு. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போவேன். மேற்கு வங்கம், அசாம் கூட போவேன் என தெரிவித்தார்.