Categories
மாநில செய்திகள்

பாஜக கூட்டத்தில் பெண் மீது தாக்குதல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.அதனால் அரசியல்  கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில்  தீவிரம் காட்டி வருகின்றன.

அதன்படி  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மாவட்ட வாரியாக பாஜக சார்பில்  பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விரும்பும் மனு பெரும் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது. அதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். அந்த கூட்டம் முடிவடைந்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் பேசினார். அப்போது பாஜக நிர்வாகிகள் திடீரென மீனாட்சி என்ற பெண் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |