பாஜக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
உயர்கல்வி, உயர்ந்த மருத்துவ படிப்பு, ஊரக கட்டமைப்பு தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைதொகை வழங்கப்படும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார். நிலையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், பாஜக அரசு திட்டங்களை புதியது போன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.