Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாஜக செயலாளர் கொலை… பாஜக ஆர்ப்பாட்டத்தில் கடை ஊழியர் படுகாயம்…

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை  அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்  சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயரகு பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே பகுதியை சேர்ந்த பாபு என்கிற மிட்டாய் பாபு விற்கும் விஜயரகு விற்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் அவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கில் சிறைக்குச் சென்ற மிட்டாய் பாபு சமீபத்தில்தான் வெளியில் வந்தார் எனவும் முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் 4 தனிப்படைகள் அமைத்து பாபுவை தேடிவருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 50க்கு மேற்பட்ட பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை வற்புறுத்தியுள்ளனர். பழக்கடை ஊழியர் அருண்குமார் கடையை மூடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் பாஜகவினர் அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அருண்குமார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |