பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவிக்கு ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவராக தமிழிசை இருந்த சமயத்தில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த பதவியை நிரப்பும் பாஜக தலைவர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறக் கூடும் அப்போது புதிய தலைவர் யார் என்று தெரியவரும் என்றார்.