Categories
மாநில செய்திகள்

பாஜக தலைவர் பதவி?…. இந்த தகுதி இருந்தால் போதும்….. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய திடீர் தற்கொலை படைதாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உயர்ந்தவர்களின் மதுரை மாவட்ட திருமங்கலம் டி. புதுபட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் என்ற ராணுவ வீரரும் ஒருவர். இதனையடுத்து கடந்த 13ம் தேதி அவரது உடல் தமிழக அந்தடைந்து ராணுவ விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டு ராணுவத்தில் மரியாதை செலுத்தி பின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலனி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது குறித்து மதுரை அவனியாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை சேர்ந்த பாஜகவினர் 6 பேரை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் திடீரென அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு சென்று தன் வருத்தத்தை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. மனதில் இருக்கும் விஷயத்தை அமைச்சர்கள் அமைச்சரிடம் தெரிவித்தேன் என்று அவர் கூறினார். பாஜகவில் நான் தொடர போவதில்லை என அறிவித்த நிலையில் பாஜக கொள்ளைக்கு விரோதமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். இந்நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணையலாம் எனக் கூறப்பட்ட போதிலும் அவருக்கு அறிவாலயம் வாசல் கதவை திறக்காமலே உள்ள விவகாரம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து பாஜகவில் இருந்து சரவணன் நீக்கப்பட்ட நிலையில் தற்காலிக நகர பொறுப்பாளராக மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாரை தவிர மதுரை மாநகரத்துக்கு மாவட்ட தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே காலி இடத்திற்கு தலைவரை நியமிக்க மாநில நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பதவிக்கு பொருத்தமானவரை தேடும் படலம் நடப்பதாக நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரேசில் பாஜக முன்னால் நகர தலைவர் சீனிவாசன், சசிராமன், மண்டல பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், துணை தலைவர் ஜெயவேல், எம்.எஸ்.ஷா மற்றும் பாஜகவை சேர்ந்த பல தலைவர் பதவிக்கு குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற வசதி படைத்தவர்களிடம் கொள்கை இல்லை என்றும் கொள்கைவாதிகள் வசதியற்றவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலே நியமனம் தாமதம் ஆவதாக முக்கிய நிர்வாகிகளை கதை கட்டுகின்றனர்.

Categories

Tech |