Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தோழமை கட்சி இல்லை – ஜெயக்குமார் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீட் வந்து 2010ல. அப்ப திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம். அந்தக் கூட்டணி அரசாங்கத்தில் திமுக சார்ந்த மத்திய அமைச்சர் 2010 ஆம் ஆண்டு திரு காந்திராஜன்,  நாமக்கல் எம் பி அவர்தான்  அறிமுகம் பண்ணுறாரு. முதலில் தமிழ்நாடுக்கு கேடு விளைவித்தது திமுக தான். திமுக கூட்டணி அரசாங்கம். இதுதான், அதுதான் வந்து உண்மையும் கூட.

காலையில் சுகாதாரத்துறை அமைச்சர்,  மக்கள் பிஜேபியையும் – எங்களையும்   மன்னிக்க மாட்டாங்கன்னு. பிஜேபி என்பது அது ஒரு கட்சி. பிஜேபியின் உடைய நிலைப்பாடு என்னன்னு பாக்கணும். பிஜேபியை பொருத்தவரையில் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரே கொள்கை நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி நீட் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்பதுதான்.  எனவே கொள்கைகளும்,  அதேபோன்று சித்தாந்தங்களும் மாறுபடும். நேற்று தோழமையில் இருந்தார்கள்,  இன்னைக்கு இல்ல. நாளைக்கு கட்சி முடிவு  பண்ணும். அது வேற விஷயம். ஆனா அவங்க கருத்துன்றது இப்ப இல்ல…  ஆரம்பத்தில் இருந்து அவங்க எடுத்த முடிவு என தெரிவித்தார்.

Categories

Tech |