Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது…. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை….!!!!

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கட்சியின் ஒப்புதல் பெற்று யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதனை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய காணொளி சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கூறிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |