செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலை பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. 138 நகராட்சி இருக்கின்றன.
21 மாநகராட்சிகள். இதற்கெல்லாம் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 1374, நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 3843 ,பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 7671 மொத்தமாக 12838 பேர் இந்த வார்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் இன்றைக்கு சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் இருக்கின்றன. அதேபோல நகராட்சிகள் 6 இருக்கின்றன.
மேட்டூர் நகராட்சி, எடப்பாடி நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, ஆத்தூர் நகராட்சி புதிதாக தாரமங்கலம் நகராட்சி, இடங்கணசாலை நகராட்சி என 6 நகராட்சிகள் இருக்கின்றன. அதில் 165 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க இருக்கின்றன. அதேபோல சேலம் மாவட்டத்தில் 31 பேரூராட்சிகள் இருக்கின்றன. இப்போதைய தேர்தலில் அவர்கள் தனியாக நிற்கிறார்கள். நாங்கள் தனியாக நிற்கிறோம். எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது அதற்கான பதில்களை சொல்வோம். அது வேற இது வேற. இது உள்ளாட்சி தேர்தல்.
இந்த மாநிலத்திற்குள் நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அந்தந்த பகுதிகளில் போட்டியிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்களது எண்ணத்தை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். பாஜக வெளியேறி வெளியேறி என்ற தவறான வார்த்தை பயன்படுத்தாதீர்கள். நாங்கள் மீண்டும் திருப்பி திருப்பி கூறுவது அந்தந்த கட்சியை சார்ந்தவர்கள் ஆங்காங்கே போட்டியிட விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் அந்தந்த கட்சிகள் முடிவெடுக்கின்றனர்.