தமிழ் நாட்டின் அமைதியை குலைக்குமாறு பொய்யான தகவலை பரப்பிய பாஜக இளைஞரணி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் கடந்த சில நாட்களாகவே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது. “குடியரசு தினத்தில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டவர்கள் 13 இந்து கோயில்களை இடித்துள்ளார்கள் சுதந்திரப் போராட்டத்தை விட இந்துக்ள் தற்போது அதிக அளவில் நசுக்கப் படுகிறார்கள். இனி வரும் உள்ளாட்சியாவது நல்லாட்சியாக அமைய ஆதரிப்பீர் பாஜக என வெளியிட்டுள்ளார்.”இது பெரும் சர்ச்சையை கிளப்பியது இதனைத் தொடர்ந்து சென்னை கீழ்பாக்கத்தில் சேர்ந்தார்.
இளங்கோவன் என்பவர் பாஜக இளைஞரணி தலைவர் மத கலவரத்தை தூண்டி தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பையும் பகையையும் உருவாக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் இந்த வழக்கானது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஏதேனும் செய்தி வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.