புதுச்சேரி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த பிறகு ஏற்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் திமுக கட்சி எம்எல்ஏ ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏ-க்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்து கொண்டனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தங்களது பெரும்பான்மையை இழந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போன்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் கட்சியில் இணைந்தால் தான் ஏற்பட்டுள்ளதாக வைரல் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக கட்சியில் இணைந்த பிறகு காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார் என்ற தலைப்பில் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஆய்வு நடத்தியதில் அது 2018 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த சம்பவம் கேட்டு நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. இருப்பினும் இது போன்ற தாக்குதல் சம்பவம் நடந்ததாக எந்த தகவலும் வெளிவரவில்லை. எனினும் புதுச்சேரி பாஜகவினர் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்…! அதனால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும்.