பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, பிளக்க புடுங்கி விட்டால் கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம் நடக்காது என்று நினைக்கிறார்கள்.இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை பிடிங்கி விடுவாங்க பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். பிராமணர்கள் மட்டும் யாரு ? பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா?
அவர்கள் மட்டும் என்ன தனியா இருக்கின்றார்களா ? இவனா சொல்கிறார்கள், தனியா இருக்காங்க என்று. சகோதரர் திருமாவளவனுக்கு சொல்கிறேன், நான் அவரை தவறாக சொல்லவில்லை. அவர்களுடைய இனத்தில் இருந்து யாரையாவது திமுகவுக்கு தலைவராக கொண்டு வர முடியுமா ? அடுத்த தேர்தலில் எல்லாம் பிஜேபி குறைந்தது 80 சீட்டுகளுக்கு பக்கத்தில் நெருங்கும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
என்னடா 80 சீட்டு சொல்கிறானே ஆளுங்ககட்சி வராதா என்றால் நாம் இல்லையென்றால் யாரும் ஆள முடியாது. அந்த அளவுக்கு கொண்டு வந்து விடுவோம். தினமும் கத்துகிறோம் காலையிலிருந்து காட்டு கத்து கத்தினா கூட தேர்தல்ல நீங்க உப்புமா கிண்டி கொடுக்குறீங்க நமக்கு, தயவுசெய்து நீங்கள் உப்புமாவை கிண்டி கொடுக்காமல், ஏனென்றால் உப்புமா கிண்டி கொடுத்தால் உங்க வாழ்க்கையின் தராதரம் தான் கீழே இறங்கிக் கொண்டே போகும் என விமர்சனம் செய்தார்.