அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அவர், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.