சந்தானம் நடிக்கும் கிக் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். அர்ஜுன் ஜனயா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிர்வனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “சாட்டர்டே இஸ் கம்மிங்” பாடல் வருகின்ற அக்-10-ம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை படக் குழு டீசர் ஒன்றை வெளியிட்ட அறிவித்திருக்கின்றது. இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடி இருக்கின்றார். இதன் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகின்றார் குறிப்பிடத்தக்கது.