சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் கோமகன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் பிரபலமானவர் கோமகன். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து அவர் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை… மனதிலும் உடலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட… அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.