Categories
தேசிய செய்திகள்

பாடகர் வீரமணி ராஜுவுக்கு கேரள அரசின் உயரிய விருது ….!!

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் உள்ளிட்டவை அடங்கும்.

Categories

Tech |