தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்க கால அட்டவணையும் வெளியாகி இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் முதல்வர் கூறியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகதரத்திற்கு ஏற்ப மாற்றப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொழில்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.