Categories
தேசிய செய்திகள்

பாடம் படிக்க சொன்னதற்காக…” எஸ்எஸ்எல்சி மாணவி போட்ட கற்பழிப்பு நாடகம்”…. இறுதியில் வெளியான உண்மை..!!

எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கற்பழிப்பு நாடகம் ஆடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரகாண்ட் மாவட்டம்,எல்லாப்புரா தாலுகா பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவி மீண்டும் மீண்டும் சரியாகப் படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்களை அழைத்து தலைமையாசிரியர் கண்டித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகளை கண்டித்து படிக்கும்படி கட்டாய படுத்தியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் மீது ஆத்திரமடைந்த அந்த சிறுமி பள்ளி விட்டு வரும் போது வீட்டிற்கு வராமல் காட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டுப் பின்னர் அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார். அவரது பெற்றோர்களிடம் தன்னை சிலர் கற்பழித்து விட்டதாக நாடகமாடி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதில் அந்த மாணவி கற்பிக்கப்படவில்லை என்ற உண்மை தெரியவந்தது. இதையடுத்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்தப் பெண் தன்னை வீட்டுப் பாடம் செய்யும் படி பெற்றோர்கள் கண்டித்ததால் நான் இவ்வாறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து மாணவிக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

Categories

Tech |