பாடலை வெளியிட்ட ஐஸ்வர்யாவுக்கு துல்கர் சல்மான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான ஐஸ்வர்யாவின் பாடல் 9 வருடங்களுக்கு பிறகு நேற்று வெளியானது. இந்த பாடலானது இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவை தமிழில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா விளம்பரம் செய்துள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மானும் தெலுங்கில் ராணாவும் விளம்பரம் செய்து வீடியோ வெளிவந்திருக்கின்றன.
Thank you so much dear Dulquer @dulQuer pic.twitter.com/X2D9NfG2St
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 16, 2022
இந்நிலையில் துல்கர் சல்மான் கூறியுள்ளதாவது, “என் தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அது இசை பாடல் வீடியோ 4 மொழிகளில் வெளியாகி உள்ளது மலையாளத்தில் யாத்ரக்காரன் என்று வருகிறது. அந்த வீடியோவை பார்த்து லைக் செய்யவும். ஐஸ்வர்யாவை ஆதரிக்கவும். ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள். அடுத்தமுறை இவ்வளவு பெரிய கேப் விட வேண்டாம். லாட்ஸ் ஆஃப் லவ் டு யூ என கூறியுள்ளார்.