Categories
மாவட்ட செய்திகள்

பாடல்களால் சாதி மோதல்….. பேருந்துகளில் இனி “NO SONGS” நெல்லை காவல்துறை எச்சரிக்கை….!!

திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் சாதி பிரச்சனை காரணமாக இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கி கொண்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாதியை அடிப்படையாக வைத்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலைதூக்கி உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இதனால்  நெல்லை மாவட்ட நிர்வாகமானது அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் சாதி, மத அடிப்படையிலான பாடல்களை ஒலிபரப்ப கூடாது என எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் நடந்தேறியுள்ள சாதி கொலை சம்பவங்களை அடுத்து ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆகவே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் சாதி, மத அடிப்படையிலான பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இளைஞர்களிடையே சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே இதனை மையமாக வைத்து நெல்லை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளில் சாதி, மத அடிப்படையிலான பாடல்களை ஒலிபரப்புவதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறும்  தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடபட்டுள்ளது

Categories

Tech |