Categories
பல்சுவை

“பாட்டியாலா நெக்லஸ்” திடீரென காணாமல் போனது…. லண்டனில் எப்படி கிடைத்தது…? வியக்க வைக்கும் உண்மை தகவல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியலா சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த பூபிந்தர் சிங் என்பவருக்காக ‘பாட்டியாலா நெக்லஸ்’ செய்யப்பட்டது. இந்த நெக்லஸ் கடந்த 1928-ம் ஆண்டு கார்டியர் ‌எஸ்ஏ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸ் 5 அடுக்கு சங்கிலியாக உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸில் மொத்தம் 2,930 வைரங்கள் இருந்துள்ளது. அந்த நெக்லஸில்  உலகின் 7-வது மிக உயர்ந்த வைரமான டி பியர்ஸ் என்ற மஞ்சள் நிறத்திலான வைரம் இருந்தது. இந்த நெக்லஸ் கடந்த 1948-ம் ஆண்டு பாட்டியாலாவின்‌ கருவூலத்தில் இருந்து காணாமல் போனது.

இந்த காணாமல் போன நெக்லஸ் இன் ஒரு பகுதி லண்டனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் நகை கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் கலிபோர்னியாவில் உள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெக்லஸ் மற்றொரு பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் பஞ்சாபில் காணாமல் போன பாட்டியாலா நெக்லஸ் லண்டன் வரை எப்படி சென்றது என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Categories

Tech |