கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற வழக்கில் பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜான் பினாய் டிக்குரூஸ் என்பவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிப்சி என்ற 52 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிப்சி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகனான சஞ்சீவ் அவரது மனைவி டிக்ஸியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். டிக்ஸி குழந்தையின் நலனுக்காக துபாயில் சென்று வேலைக்கு சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகளையும் மாமியார் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் முறை தவறிய வாழ்க்கை முறையால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார் சிப்சி. நேற்று தனது கள்ளக்காதலனுடன் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது சிப்சி இரண்டு குழந்தைகளையும் காதலினிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார், அப்போது அந்த குழந்தை மலம் கழித்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் கழிவறையில் உள்ள பக்கெட்டில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்த தகவலை சிப்சியிடமும் கூறியுள்ளார். விரைந்து வந்த சிப்சி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை பால் குடிக்கும் போது மூச்சு திணறி உள்ளது என்று சிப்ஸி மருத்துவர்களிடம் தெரிவித்தார். ஆனால் இந்த வாக்குமூலத்தில் சந்தேகப்பட்ட மருத்துவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தனது கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் இறுதி சடங்குக்கு குழந்தையின் தந்தை சஞ்சீவ் வந்தபோது மனைவியின் உறவினர்கள் அவரை பார்க்க விடாமல் தடுத்தனர்.
வயதான தாயை அடக்கி வைக்கத் தெரியாததால் தங்களின் குழந்தையின் உயிர் பறிபோய் விட்டதே என்ற ஆத்திரமடைந்த உறவினர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கூறிய போதும் அவர்கள் தொடர்ந்து அவரை அடித்து விரட்டினர். மேலும் அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். உறவினர்களின் தாக்குதலுக்கு பின்னர் தாமதமாக வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.