சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயமூர்த்தி என்ற வாலிபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது பாட்டியை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஜெயமூர்த்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.