Categories
தேசிய செய்திகள்

பாட்டிய கூட விட்டு வைக்க மாட்டிங்களா…? 60 வயதை கற்பழித்த 20 வயது இளைஞன்…எஸ்கேப் ஆகும்போது கப்புன்னு புடிச்ச போலீஸ்..!!!!

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டிகா மாவட்டம் ஹூர்டாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் 60 வயதான பெண் பணியாற்றி வருகிறார்.  அப்போது  ஹோட்டலுக்குள் தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்ட 20 வயதான திகேஷ்வர் ஹஜம் என்ற இளைஞன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்த அந்த நபர் ஜார்க்கண்டில் இருந்து வெளியேற முயற்சி செய்து ஒடிசா வழியாக டெல்லி செல்ல திட்டம் தீட்டியுள்ளார். டெல்லி செல்ல முயற்சித்தபோது எல்லையில் திகேஷ்வர் ஹஜமை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து திகேஷ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |