பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!!
அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்…
வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு..
வெள்ளரிக்காய்:
கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால் கண்களில் இருக்கக்கூடிய சோர்வு நீங்கி கண்ணைச் சுத்தி இருக்கக்கூடிய கருவளையங்கள் நீங்கி விடும். இதனால் தான் அழகு நிலையங்களுக்கு செல்லும்பொழுது முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு அதுக்கு அப்புறம் நம்ம கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கிறாங்க..
வீட்டிலேயே செய்யலாம், வெள்ளரிக்காயை துண்டுகளாக சுட் பண்ணி பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அதை பேஸ்ட் பண்ணி அப்ளை பண்ணிட்டு, ஒரு 20 நிமிஷம் கழிச்சு பாருங்க. அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்..
இப்படி செய்வதால் இரண்டு, மூன்று நாள்களிலே கண்களுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளையங்கள் மறைந்துவிடும்.
முகம் கழுவும் முறை:
ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை வாஷ் பண்ணலாம். நம்முடைய முகத்தை ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு முறை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
ஒவ்வொரு தடவையும் முகத்தை கழுவும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவை நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைகடலை மாவை பயன்படுத்தினால் போதும்..
ஆவி பிடிப்பதன் சிறப்பு:
அந்த காலத்தில் பியூட்டி பார்லர் கிடையாது..ஆகவே பெண்கள் தங்களுடைய அழகை பராமரித்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றிய ஒருமுறை ஆவி பிடிப்பது.. இந்த ஆவி பிடிப்பதன் மூலம் தங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களை போக்குவதற்கும், பருக்கள் வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தினார்கள்..
இதற்கு நீங்கள் அகலமான பாத்திரத்தில் நன்று சூடான தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு அதில் சிறிதளவு துளசி இலை இந்த இரண்டையும் போட்டு அதன் மூலமாக வரும் ஆவியை பிடித்தால் உங்க முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் விரைவில் மாற தொடங்கும்.. பருக்கள் வராமலும் தடுக்க முடியும்.
பழங்களின் நன்மை:
முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடணும்னா, ஒன்று கடையிலே இருக்கக்கூடிய பேஸ் மாஸ்க் பயன்படுத்தி போடுவோம், இல்லை என்றால் பார்லர் சென்று காசு கரியக்குவோம்.. இதற்கு பதிலாக பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் இருக்கக்கூடிய சத்துக்கள், முகத்தை பளிச்சென்று பொலிவுற செய்யும்..
அதிலும் குறிப்பாக மாம்பழம், பப்பாளி, திராட்சை, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி இந்த பழங்களை நீங்கள் பயன்படுத்தி பேஸ் மாஸ்க் போடும் பொழுது உங்கள் முகம் இன்னும் பளிச்சென்ற அழகாகவும் இருக்கும்..
முடி வளர்ச்சி:
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை உங்கள் தலையில் தேய்த்து 20 நிமிடம் வரைக்கும் நல்ல மசாஜ் செய்து, 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் குளித்தீர்கள் என்றால், முடியோட வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமின்றி அடர்த்தியாகவும் வளரும்..
குறிப்பாக இரவு நேரத்தில் மசாஜ் செய்து காலையில் குளித்தால் அதோட பலன் இன்னும் அதிகமாகும். அதேமாதிரி நம் முடிக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, தயிரைப் பயன்படுத்தினால் நம்முடைய முடி பார்ப்பதற்கு சைனிங்காக இருக்கும்..
சருமம் :
நம்முடைய சருமம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும், சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு..கிரீம்கள், லோஷன்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி நமது சருமத்தை பராமரித்து வந்தாலே போதும்.. நமது சருமம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்..
முடி உதிர்வு மற்றும் பொடுகு:
தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான ஒரு குறிப்பு பொடுகு நீங்குவதற்கும், தேவையான அளவு எலுமிச்சை சாறு கூட சம அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு 4 ஸ்பூன் அளவு கெட்டியான புளித்த தயிர், சேர்த்து இதை தலைமுடியில் நன்றாக அப்ளை பண்ணி மசாஜ் செய்து குளித்து வந்தால், தலை முடியானது நல்லா சுத்தமாகவும், பொடுகு இல்லாமலும் இருக்கும்..இது நம்ம முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும்..
உதடுகளின் அழகு:
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு எண்ணெய் எப்பொழுதுமே பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிதளவு நெய்யை அடிக்கடி உங்கள் உதடுகளில் அப்ளை பண்ணி வந்திர்கள் என்றால், உதடுகளில் இருக்கக்கூடிய வெடிப்புகள் மறைய ஆரம்பித்து அழகு கொடுக்கும்..
கை, கால் முடி நீங்க:
தினமும் காலையில் எழுந்ததும் கை மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய்யை பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்த பின் குளிப்பதினால், உங்கள் கைகள் மற்றும்கால்களில் இருக்க கூடிய முடிகள் அனைத்தும் அகன்று சருமம் மென்மையாக மாறிவிடும்..