Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாட்டி மற்றும் பேரன் கொலை வழக்கு…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் முகமது காசிம்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி மேக்கரை பகுதியில் வசித்த பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் முகமது காசிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், முகமது காசிமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி முகமது காசிமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |