Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுவன்…. தாயிடம் கதறி அழுத சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Categories

Tech |