பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மேரியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மேரியின் மகளும், மகனும் காட்டூரில் இருக்கும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தனக்கு யாரும் இல்லாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.