Categories
தேசிய செய்திகள்

பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியில் சரத் மற்றும் சுனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதவ்(12) என்ற மகன் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர் பாட்டி வீட்டிற்குச் செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர் அனுமதி கொடுக்கவில்லை.

அதனால் கோபமடைந்த சிறுவன் சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |