Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாட்டி” வெளியே சென்ற நேரத்தில்…. சிறுமியின் வாழ்கையை சீரழித்த உறவினர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்த சிறுமையின் மாமா முறையான காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த செங்கதிர்(32) என்பவர் அதே வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாட்டி இல்லாத நேரத்தில் செங்கதிர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை பார்த்த சிலர் வீட்டிற்கு வந்த பாட்டியிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செங்கதிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |