Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாட்டு கேட்டு கொண்டே நடந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீசாரின் எச்சரிக்கை…!!

ரயிலில் அடிபட்டு ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணங்களின் போது சிலர் அஜாக்கிரையாக இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ரயிலில் பயணிக்கும் போது கவன குறைவாக இருப்பதால் கீழே தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் சிலர் செல்போன் உபயோகித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி இருக்கின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்வதில்லை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தனியார் ஹோட்டலில் கார்த்திக்(40) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை செல்போனில் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு கார்த்திக் முள்ளுப்பாடி அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடந்த சென்றுள்ளார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற ரயிலில் அடிபட்டு கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது கோவை- பொள்ளாச்சி இடையே இருக்கும் அகல ரயில் பாதையில் யாரும் நடந்து செல்லக்கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் சிலர் அந்த செயலை தொடர்ந்து செய்கின்றனர். இதனால் உயிரையும் இழந்து வருகின்றனர். எனவே தண்டவாளத்தில் யாரேனும் நடந்து சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories

Tech |