Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி அசத்திய பாலாஜி… கைத்தட்டி தாளம் போடும் ஹவுஸ் மேட்ஸ்… வெளியான அன்சீன் வீடியோ…!!

பிக்பாஸின் போட்டியாளர் பாலாஜி பாட்டு பாடும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸின் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது போல இன்றைய முதல் புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில்  பிக்பாஸ் போட்டியாளர்களில் மிக கடுமையான போட்டியாளரான பாலாஜி தற்போது பாடல் பாடி அசத்தியுள்ளார்.

இன்று அவரது  பிறந்த நாளை முன்னிட்டு பாலாஜியும் ஆஜித்தும் பாட்டு பாட சக போட்டியாளர்கள் கைதட்டி தாளம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் முகின் என்ற போட்டியாளர் பாட்டு பாடி பிரபலமடைந்தது போல பாலாவும் இந்த பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |