நடிகர் தனுஷ் தனது மனைவியை ஐஸ்வர்யாவுக்காக பாட்டு பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார். நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
https://twitter.com/DirectorS_Shiva/status/1389243835662823426
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுக்காக பாடல் பாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற இளமை திரும்புதே பாடலை தனுஷ் பாட ஐஸ்வர்யா க்யூட்டாக வெட்கப்படுகிறார் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.