ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
Categories