சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு பாண்டா கரடி ஆகும். இந்த பாண்டா பார்ப்பதற்கு ஒரு சிறிய கரடியை போன்று தோற்றமளிக்கும். இதில் வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 மீ சுற்றளவு மற்றும் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பாண்டா கரடி பார்ப்பதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்நிலையில் பெண் பாண்டா கரடிகள் 2 குட்டிகள் வரை பெற்றெடுக்கும். இதில் 1 குட்டியை மட்டும் பாண்டா கரடி வளர்க்கும். ஆனால் மற்றொரு குட்டிக்கு சாப்பாடு கொடுக்காது. இதனால் அந்தக் குட்டி கரடி இறந்துவிடும்.
ஏனெனில் பாண்டா கரடிகள் ஒரு பாலூட்டி ஆக இருப்பினும், அதால் ஒரு குட்டிக்கு மட்டுமே பால் கொடுக்க முடியும். ஒருவேளை பாண்டா கரடி 2 குட்டிகளுக்கும் பால் கொடுத்தால் 2 குட்டிகளும் இறந்துவிடும். இந்நிலையில் பாண்டா கரடியின் குட்டிகள் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடிக்கும். இது பாண்டா கரடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான் பாண்டா கரடிகள் ஒரு குட்டியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு குட்டிக்கு மட்டுமே பாலுட்டி வளர்க்கிறது