பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரமின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன்- தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா ராஜ்குமார், குமரன், காவியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சின்னதம்பி உள்ளிட்ட சில சீரியல்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சரவண விக்ரம் தனது அம்மா, அப்பா, தங்கை ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.