பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவியா மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்கு பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார் .
ஆரம்பத்தில் காவியாவுக்கு ரசிகரகளிடையே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து காவியா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் பரத்- வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காவியா மார்டன் உடையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.