பாண்டியன் ஸ்டோர் சீரியல் இலிருந்து நடிகர் குமரன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியலில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் திடீரென வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
அதில் ‘நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என நம்புகிறேன். நான் அதில் நன்றாக செய்தேன். வெற்றி, வெற்றி இல்லை என்பதை எல்லாம் தாண்டி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இப்போது நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம்’ என பதிவிட்டுள்ளார். குமரனின் இந்த பதிவால் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலிருந்து குமரன் விலகப் போகிறாரா ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.