பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஸ்பெஷல் எபிசோட் 2:30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் . அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . மேலும் இந்த சீரியல் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிளாஷ்பேக் வரப்போகிறது. இந்நிலையில் இந்த ஸ்பெஷல் எபிசோட் வருகிற வியாழக்கிழமை(ஏப்ரல் 29) மாலை 6 மணி முதல் 8: 30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.