பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் மூர்த்தியுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பத்திற்குள் நடக்கும் போராட்டங்களை பற்றி இந்த இரண்டு சீரியல்களின் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பானது.
ஆனால் அது ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை . இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மூர்த்தி பாக்கியலட்சுமி சீரியல் நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருவருமே வேறொரு லுக்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.